india

img

குழந்தைகள் மீது தடுப்பூசி பரிசோதனை: பயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு அனுமதி....

புதுதில்லி:
குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு கொரோனா தடுப்பூசியில் அடுத்தகட்டப் பரிசோதனை நடத்தஹைதராபாத்தைச் சேர்ந்தபயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.இந்த நிறுவனம் குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்காக கார்பிவேக்ஸ் என்ற தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி எனும் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜைகோவ்-டி மருந்து 12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த மாதத்துக்குள் கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்குத் தயாராகிவிடும் என நம்பப்படுகிறது.இந்நிலையில் தற்போது மூன்றாவதாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்மஹிமா தத்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தடுப்பூசியின் அடுத்தகட்ட பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல்அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒப்புதல் எங்களைஅடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். வெற்றிகரமாகத் தடுப்பூசியை உற்பத்தி செய்து, தடுப்பூசி பற்றாக்குறையை நீக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;