india

img

2 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி.....

புதுதில்லி:
2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி 2-வது மற்றும் 3வது  கிளினிக்கல் பரிசோதனை நடத்திக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்புக்கு  இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.முதல்முறையாக 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து பரிசோதிக்க அனுமதி கோரியது. இந்த நிறுவனம் 2-வது கட்டம் மற்றும் 3வது கட்ட கிளிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர்குழு அனுமதியளித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனைகள்தில்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்ஐஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பரிசோதனைகள் தொடங்கப்படும் என்று பாரத் பயோடெக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;