india

img

‘லவ் ஜிகாத்’ என்று கூறி சமூகத்தைப் பிளவுபடுத்துகின்றனர்... பாஜகவை சாடிய ஐக்கிய ஜனதாதளம் தலைவர்

பாட்னா:
லவ் ஜிகாத்தை தடுக்கிறோம் என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர்ஈடுபடுகின்றனர் என்று பாஜகவை ஐக்கிய ஜனதாதளம் தலைவர் கே.சி. தியாகி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். எனினும் கூட்டணியில் இருந்துகொண்டே ஐக்கியஜனதாதளத்திற்கு குழிபறிக்கும்வேலையில் பாஜக அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது.

அருணாசல பிரதேசத்தில் ஐக்கியஜனதாதளம் கட்சியின் 6 எம்எல்ஏக்களை தன்பக்கம் இழுத்து, அந்த கட்சியையே ஒட்டுமொத்தமாக துடைந்தெறிந்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் தொடருவதா? என்று நிதிஷ் குமார் தற் போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.உ.பி., ம.பி. மாநிலங்கள் போன்று பீகாரிலும் காதல் திருமணங்களுக்கு தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக நிர்ப்பந்தம் அளிப்பதும் நிதிஷூக்கு சங்கடத்தை ஏற் படுத்தியுள்ளது.இந்நிலையில், “லவ்ஜிஹாத் என்ற பெயரில் சமூகத்தில் வெறுப்புணர்வையும் துவேஷத்தையும் உண்டாக்கி மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றனர்” என்று பாஜக-வைஐக்கிய ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் கே.சி. தியாகி மறைமுகமாக சாடியுள்ளார்.

மேலும், “உரிய வயதுத் தகுதி உடைய இரண்டு பேர் அவரவர்களது வாழ்க்கைத் துணையை எந்த ஒரு மத, சாதிப் பாகுபாடு இல்லாமல் தேர்வு செய்ய சுதந்திரம் உடையவர்கள் என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ராம்மனோகர் லோஹியா காலத்திலிருந்தே சாதி மத பேதமற்ற திருமணங்களை சோசலிஸ்ட்கள் நடத்தி வைத்துள்ளனர்; அதற்கான உரிமையையும் அவர்கள் நிலைநாட்டியுள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.

;