india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பிராமணர்க்கு எதிராக பேசியதாக வழக்கு!

‘‘இந்தியாவில் உள்ள அனைத்து கிராமமக்களிடமும் நான் ஒன்றை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். பிராமணர்களை உங் கள் கிராமத்துக்குள் அனுமதிக்காதீர்கள். நாம் அனைவரும் பிராமணர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களை மீண்டும் வோல்கா நதி பகுதிக்கே திருப்பி அனுப்பவேண்டியது அவசியம்’’ என்று சத்தீஸ்கர்காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் 86 வயது தந்தை நந்தகுமார் பாகேல் கூறியிருந்தார். இதற்காக, அவர் மீது 153A(பல்வேறு சமூகத்தினருக்குள் பகைமையை உருவாக்குதல்), 505(1) (B) (உள் நோக்கத்துடன் பயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

                                 ******************

விடுதலைக்கு போராடாதவர்கள் வரலாறு உருவாக்க முயற்சி

“இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழக நிகழ்ச்சியில், நாட்டின் முதல் பிரதமரான நேரு, முதல் கல்வியமைச்சர் ஆசாத் ஆகியோரது புகைப்படங்களைப் புறக்கணிப்பது அப்பட்டமான அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையைத் தவிர வேறுஎதுவுமில்லை. சுதந்திரப் போராட்டத்திலேயே பங்கேற்காத ஒரு பிரிவினா், சுதந்திரப் போராட்ட வீரா்களை ஒதுக்கிவைத்து ஒரு வரலாற்றை உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது அவா்களது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது” என்று ஒன்றிய பாஜக அரசை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். 

                               ******************

கிலானி குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு?

காஷ்மீரில் உள்ளபண்டிபோரா மாவட் டத்தைச் சேர்ந்தவர் சையது அலி ஷா கிலானி. காஷ்மீரைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற பிரிவினைவாத கோரிக் கைக்காக போராடி வந்த அவர், தனது92 வயதில் புதன்கிழமை மரணமடைந்தார். இதனிடையே, கிலானியின் உடல் மீது அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் கொடியைப் போர்த்தியதாகவும், இறுதிச்சடங்கின் போது தேசத்துக்குஎதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

                               ******************

பெட்ரோல் விலைகள் உயர தலிபான்கள் காரணம்..!

“ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதால் உலகெங்கும் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்குத்தலிபான்களே காரணம்” என்று கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினரான அரவிந்த்பெல்லாட் புதிய காரணம் கண்டுபிடித்துள்ளார்.

                               ******************

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றிபெற வாய்ப்பு

2022-இல் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக ஏபிபி (ABP) செய்தி நிறுவன கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மிக்கு51 முதல் 57 இடங்களில் வெற்றிவாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28.8 சதவிகிதமும், ஆம் ஆத்மிக்கு 35.1 சதவிகிதமும், சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 21.8 சதவிகிதமும்,பாஜகவிற்கு 7.3 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கலாம் என்று ஏபிபி கூறியுள்ளது.

;