india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்குத் தேவை!

“தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு மாநிலங்களில் வெற்றியை தேடித் தந்துள்ளார். எனவே அவரின் தேவை அவசியமாகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வெளியில் இருந்து சீர்திருத்தங்களை செய்வதற்கு பதில் கட்சிக்கு உள்ளே வந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதற்கு அவரை காங்கிரஸ் கட்சிக்குள் சேர்ப் பதே நல்லது. அவரால் மிகப்பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்த முடியும்” என்றுகாங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

                                                    *****************

உ.பி., கோவா தேர்தலில்சிவசேனா போட்டியிடும்!

“உ.பி., கோவா மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனா கட்சி போட்டியிட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 இடங்களில்போட்டியிடும். கோவாவில் 20 இடங்கள்வரை போட்டியிடுவோம். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி விவசாயிகள் சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகஉறுதியளித்துள்ளார்கள்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

                                                    *****************

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் வேண்டும்

“பல்வேறு சமூகத்தைச் சோ்ந்த மக்கள்தொகையை சரியாக அறிந்து கொள்ளும் வகையில், சாதி வாரியாக கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். எனினும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியே முடிவு செய்வார் என்றும் அத்வாலே நழுவியுள்ளார்.

                                                    *****************

2024 பொதுத்தேர்தலில்  காங்கிரஸ் ஆட்சி

காங்கிரஸ் நிலப்பிரபுத்துவ காலத்து மனநிலையிலேயே இருப்பதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்அண்மையில் விமர் சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலளித்துள்ளார். “நான்சிறிய காங்கிரஸ் தொண்டன். சரத்பவாரின்கருத்து குறித்து நான் எதுவும் கூறமாட்டேன். கடந்த காலங்களில் காங்கிரஸ் பல்வேறு தலைவர்களை (சரத்பவார் உள்ளிட்டோர்) வளர்த்தது. ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர். ஒன்றை மட்டும் என்னால் கூற முடியும், 2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை கைப்பற்றும்! என்று படோல் கூறியுள்ளார்.

                                                    *****************

பட்டியல் வகுப்பினரின் தொழிற்கடன் தள்ளுபடி 

பஞ்சாப் மாநிலத் தில், பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் 10 ஆயிரத்து 151 இளைஞர்கள் பெற்றுள்ள தலா ரூ. 50 ஆயிரம் வரையிலான- மொத்தம் ரூ. 41 கோடியே 48 லட்சம் மதிப்பிலான தொழிற்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக பஞ்சாப் மாநில சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாதுசிங் அறிவித்துள்ளார். கொரோனா தொழில் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இந்த தள்ளுபடி உதவியாக இருக்கும் என்று அமைச்சர் சாதுசிங் கூறியுள்ளார்.

;