india

img

இதுவரை 50 எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி அளித்தனர்... நாடுதழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு...

புதுதில்லி:
விவசாயிகளை வஞ்சிக்கும் மத்தியஅரசுக்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், நாடு முழுவதுமுள்ள எழு த்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் திருப்பி அனுப்புவதாக அறிவித்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் எழுத்தாளர் ஷிவ்ராஜ் வீர், கவிஞர் மோஹன் ஜித், டாக்டர் ஜஸ்வேந்தர் சிங் உள்ளிட்ட15-க்கும் மேற்பட்டோர் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்த னர்.பலர் தில்லிக்கு நேரடியாகவே சென்றும், மற்றவர்கள் அஞ்சலிலும் விருதுகளை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்டஎழுத்தாளர்கள் இதுவரை தங்களின்விருதுகளையும் பரிசுத் தொகைகளை யும் திருப்பி அளித்துள்ளதாக சாகித்ய அகாடமியின் பொதுச்செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசராவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.ஒருமுறை அளித்துவிட்ட விருதை திரும்பப் பெறும் நடைமுறை சாகித்ய அகாடமியின் சட்ட திட்டங்களில் இல்லை என்பதால், எழுத்தாளர்கள் அவர்கள் ஒப்படைத்த விருது மற்றும் காசோலைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு தகவல் அனுப்பியதாக வும், ஆனால், இதுவரை ஒரு எழுத்தாளர் கூட, விருதையோ, காசோலை யையோ  பெற்றுக் கொள்வதற்கு முன்வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.திருப்பி அளித்த விருதுகள் மற்றும்காசோலைகளை தில்லி அலுவலகத்திலேயே பாதுகாத்து வைத்துள்ளதாக வும், காசோலைகள் சாகித்ய அகாடமியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றும் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

;