ஏப்ரல் 16 அன்று தில்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஜஹாங்கிர்புரியில் பேரணியாக சென்றுள்ளனர்.
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர். மேலும் தேசிய கோடியை அசைத்தவாறு பேரணியில் சென்றவர்கள் மத நல்லிணக்கத்திற்கான கோரிக்கையை வைத்தனர்.
இந்த மத நல்லிணக்க பேரணியை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதுதான் உண்மையான ஜஹாங்கிர்புரியின் முகம். இந்த பேரணி மீண்டும் இங்கு அமைதியை மீட்டெடுக்க உதவும் என்று அப்பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் தெரிவித்துள்ளார்.