india

img

மே.வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டுவது கஷ்டம்.... ஊடகங்கள்தான் அக்கட்சியை ஊதிப் பெரிதாக்குகின்றனர்.... பிரசாந்த் கிஷோர் அதிரடி

புதுதில்லி:
“மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டைஇலக்கத்தை தாண்டுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்,தனது டுவிட்டர் சமூகவலைத் தள நண்பர்கள் மத்தியில் கருத்து பதிவிட்டுள்ளார்.
“ஒருவேளை தான் சொன்னது நடக்காவிட்டால், டுவிட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுகிறேன்” என்றும்அவர் சவால் விடுத்துள்ளார்.2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இதேபோலபீகாரில் நிதிஷ் குமாரின் ஐக் கிய ஜனதாதளம் கட்சிக்கும், பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் அம்ரீந்தர் சிங்கிற்கும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர், 2021 மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரசுக்கு வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்அந்தக் கட்சியிலிருந்து கொத்துக்கொத்தாக விலகி பாஜகவில்சேருவதும், அடுத்து நாங்கள்தான் ஆட்சி என பாஜக கூறுவதுமாக இருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோர் டுவிட்டரில்கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.“மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவு ஊடகங்களின் ஒரு பகுதியினரால் அக்கட்சியின் செல்வாக்கு மிகைப்படுத்தி ஊதிப் பெரிதாக்கப்பட்டு வருகிறது. உண்மையில் பாஜக மேற்குவங் கத்தில் இரட்டை இலக்கங் களை தாண்டவே போராடும்.தயவுசெய்து இந்த டுவீட் டைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பாஜக அதைத் தாண்டி ஏதேனும் சிறப்பாகச் செய்தால், நான் இந்த இடத்தை (டுவிட்டர் சமூகவலைத்தளத்தை) விட்டு வெளியேறுகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார்.

;