india

img

‘கூகுள் பே’, ‘போன் பே’ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை... என்பிசிஐ விளக்கம்....

புதுதில்லி:
‘கூகுள் பே’ (Google Pay), ‘போன் பே’ (PhonePe) உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் போது, தற்போது இருக்கும் நடைமுறையே தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. கட்டணம் எதுவும் விதிக்கும் திட்டமும் இல்லை என்று நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (National Payments Corporation of India - NPCI) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‘கூகுள் பே’, ‘போன் பே’,‘அமேசான் பே’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவன அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கூகுள் பே, போன் பே, அமேசான் பேஉள்ளிட்ட செயலிகள் மூலம்பணம் பரிவர்த்தனை செய்வதற்கு என தனி கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை.அப்படி எந்த முடிவையும்என்பிசிஐ அறிவிக்கவில்லை. அப்படி வந்த செய்திகளில் உண்மையும் இல்லை. இப்போது இருக்கும் நடைமுறையே தொடரும்” என்று தெரிவித்துள்ளனர்.

;