india

img

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியாக ரூ.20 லட்சம் கோடி கொள்ளை.... காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
பெட்ரோல், டீசல்  உற்பத்தி வரியாக  எளிய மக்களிடம்  ரூ.20 லட்சம் கோடியை மத்திய மோடி  அரசு கொள்ளையடித்துள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலையுயர்வால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்படுகின்ற னர். ஆனால் விலையை குறைப்ப தற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கைபார்த்து வருவதாக பொது மக்கள் கோபத்துடன் குற்றம்சாட்டு கின்றனர்.இந்நிலையில் விலை உயர்வு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் ஹேரா செய்தியார்களிடம் கூறியதாவது:கடந்த 6 ஆண்டுகளில் 8 மாதங்களாக மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுபெட்ரோல், டீசலுக்கான உற்பத்திவரியாக ரூ.20 லட்சம் கோடி வசூலித்துள்ளது. இதில் பெட்ரோல் விலை மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் லிட்டருக்கு 23.78 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 28.37 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதில் டீசல்
விலை மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 820 சதவீதமும், பெட்ரோல் விலை 258 சதவீதமும் உயர்ந்துஉள்ளன.

பெட்ரோல், டீசல் மீது உற்பத்திவரி செலுத்தி சாமானிய மக்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கோடியைக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு கொள்ளை யடித்துள்ளது. உடனடியாக இந்தக் கூடுதல் வரி உயர்வை மத்திய அரசு 
திரும்பப் பெற வேண்டும்.கடந்த 6 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட உற்பத்தி வரியைக் குறைத்தாலே, பெட்ரோல் லிட்டர் ரூ.61.92 ஆகக் குறைந்துவிடும், டீசல் லிட்டர் ரூ.47.51 ஆகச் சரிந்துவிடும். நாட்டில் உள்ள ஒவ்வொருசாமானியரும் இந்தச் சுமையி லிருந்து விடுபடத் தகுதியானவர்கள். கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் பணியாற்றும் அரசுக்காக எதற்கு சாமானிய மக்கள் இந்த விலையை அளிக்க வேண்டும்.நாட்டு மக்களின் உணர்ச்சி களைத் தூண்டும் விஷயங்களை அடிக்கடி கிளப்பி, தங்களுடைய ஆட்சியின் மீதான கோபம், அச்சம், தோல்வி ஆகியவற்றிலிருந்து திசைதிருப்பியே மத்திய அரசு வைத்திருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;