headlines

img

மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா அனுமதிக்கக் கூடாது!

மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா அனுமதிக்கக் கூடாது! 

மூன்று நாட்கள் தீவிர தாக்குதல்கள் மற்றும் பதட்டமான சூழலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ் தானும் சனிக்கிழமையன்று இராணுவ நடவடிக்கை களை நிறுத்திக் கொள்வதாக ஒரு புரிதலை அறி வித்தன. இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்டவர்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆவார்.  இரு நாடுகளுக்கும் இடையே “போர்நிறுத்தம்” என்று அவர் கூறினார். மேலும் அறிக்கைகளில், அமெ ரிக்க அதிகாரிகள், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலா ளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இரு நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த தாகவும், அதுவே இந்த புரிதலை அடைய “உதவிய தாகவும்” கூறினர்.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குத லால் தற்போதைய பதட்ட நிலை ஏற்பட்டது. இதைய டுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இலக்கு களுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுத்தது. இந்திய ஆயுதப்படைகள் அசாதாரண தைரியம் மற்றும் தொழில்முறையுடன் செயல் பட்டன. அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பொதுமக்கள் இன்னல்கள், அமைதி மற்றும் சொத்து  இழப்பு என பெரும் விலை கொடுத்தனர்.

பாகிஸ்தானும் தாக்குதலில் இறங்கிய நிலை யில், பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில், மோதல்  நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இப்போது ஒரு போர் தவிர்க்கப்பட்டு, மோதல் நிறுத்தப்பட்டுள்ளதால், மோடி அரசு தான் கற்றுக் கொண்டவற்றை மதிப்பீடு செய்து, இந்திய மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள், அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துமாறு கோரியுள்ளன. நாடாளு மன்றத்தின் சிறப்பு அமர்வு நடத்தவும் கோரிக்கை உள்ளது. பல எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையை ஆதரித்துள்ளன.

ராணுவ நடவடிக்கைகளின் போது முன்னேற்றங் கள், நிலைகள் விவரங்கள் மற்றும் போரில் உயிரி ழப்புகள் குறித்த முக்கிய கேள்விகளில் ஒன்றிய அரசு  இனி மௌனம் காக்க முடியாது. சமீபத்திய நாட்கள்  இந்தியாவுக்கு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் புவிசார் அரசியலில் முக்கியமான புதிய திருப்பங் களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையி லான மோதலில் அமெரிக்காவின் தலையீடு புதிதல்ல.  ஆனால் ஒன்றிய அரசு இதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் இது காஷ்மீர் விவகாரத்தின் சர்வதேசமயமாக்கல் பற்றிய கவலைகளை எழுப்பு கிறது. இப்போது டிரம்ப் புதிய புதிய விளக்கங்களை அளிக்கிறார். எனினும், இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு பிரச்சனையில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. புவி அரசியல் முக்கியத் துவம் வாய்ந்த இரு நாடுகளும் தங்களுக்கு இடையே அமெரிக்காவை  அனுமதிப்பது மிகப்பெரும்  ஆபத்து என்பதை உணர வேண்டும்.