india

img

ஒவ்வொரு விவசாயியும் பகத்சிங்காக மாறியுள்ளனர்... தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை நிராகரித்து தில்லி சட்டமன்றத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. சட்டநகல்களை சட்டமன்ற அவையிலேயே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார். அப்போது, போராட்டம் நடைபெறும்இடத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு பகத்சிங்காக மாறியிருக்கிறார்கள் என்று கூறினார்.

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு மாநில விவசாயிகள்  கடந்த 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி விவாதிக்க  சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் டிசம்பர் 17 வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை நிராகரித்து மாநில அரசால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் தில்லி மாநில அரசு உறுதியளித்துள்ளது.

இதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ மகேந்திர கோயல்ஆகியோர் மத்திய அரசின் வேளாண்சட்ட நகல்களை அவை உறுப்பினர்களின் முன்னிலையில் கிழித்தனர்.  தீர்மானத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனை முன்மொழிந்து முதல்வர் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் பேசுகையில், “இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரைவிட மோசமாக மாறாதீர்கள்” என்றுமத்திய பாஜக அரசை சாடினார்.மேலும் பேசுகையில், தில்லி சட்டமன்றம் 3 வேளாண் சட்டங்களையும் நிராகரித்துள்ளது. 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் வேளாண் சட்டங்கள் பாஜகவிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு “நிதி”சேகரிப்பதற்காகக் கொண்டுவரப் பட்டது. விவசாயிகளின் போராட்டத்தில்இதுவரை 20-க்கும் மேற்பட்ட விவசாயி கள் தியாகிகளாகி இருக்கிறார்கள். நாட்டிலுள்ள விவசாயிகளின் குரல்களைக் கேட்பதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கேட்பீர்கள்?. போராட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு பகத்சிங்காக மாறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

;