india

img

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த அவசர அனுமதி வழங்கிடுக... அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கோரிக்கை

புதுதில்லி:
தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அவசர அனுமதி வழங்க வேண்டும் என்று ஃபைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாள்தோறும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளும் மருத்துவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதாகவும் இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. 

பைசர் நிறுவனத்தின்  கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு முதல் நாடாக இங்கிலாந்து அரசு அனுமதிஅளித்தது. பைசர் நிறுவனத்தின் மருந்தை முதற்கட்டமாக 2 கோடி பேருக்கு  அடுத்த வாரம் முதல் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாடாக பக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அவசர அனுமதி வழங்க வேண்டும் என்று ஃபைசர் நிறுவனம் இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே, இந்த மருந்தை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன் பதிவு செய்துள்ளன. இந்த தடுப்பு மருந்துஒருவருக்கு இரண்டு டோஸ்கள் செலுத்தப்படும். அடுத்த ஆண்டு 1,300 கோடி டோஸ்கள்உற்பத்தி செய்யப்படும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

;