india

img

கொரோனா: குணமடைந்தோர் விகிதம் 94.93 சதவீதமாக உயர்வு...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 94.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 57 ஆயிரத்து 029 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 019 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்து 57 ஆயிரத்து 464 பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.93 சதவீதமாக  உள்ளது. கொரோனா தொற்றுக்கு 3 லட்சத்து 56 ஆயிரத்து 546 பேர் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.62 சதவீதமாகக்குறைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;