india

img

4 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் : காங்கிரஸ் அபாரம் : பாஜகவிற்கு பலத்த அடி...

தில்லி
மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சத்தீஸ்கரின் கைராகர், மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, பீகாரின் போச்சான் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த 5 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. பாஜக வசம் இருந்த அசன்சோல் மக்களவைத் தொகுதியை (மேற்கு வங்கம்) திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளரும் நடிகருமான சத்ருகன் சின்ஹா, பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பாலை 3.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சத்தீஸ்கரின் கைராகர், மகாராஷ்டிராவின் கோலாப்பூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரின் போச்சான் தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே தொகுதியை ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. மொத்தத்தில் பாஜக 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது.

;