india

img

போர்க்களமானது தமிழகம்..... விவசாயிகளுக்கு ஆதரவாக அம்பானி, அதானி நிறுவனங்கள் முன்பு போராட்டம்.... மாநிலம் முழுவதும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்.....

புதுதில்லி/சென்னை:
மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி 19 நாட்களாக நீடித்து வரும் இந்திய விவசாய வர்க்கத்தின் மகா எழுச்சி புதியதோர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் டிசம்பர் 14 திங்களன்று விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டங்கள், அனைத்து எதிர்க்கட்சிகளின் தொடர் ஆர்ப்பாட்டங்கள், மோடி அரசின் கூட்டுக் களவாணி களான அதானி, அம்பானி கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பு மறியல் போராட்டங்கள் என நாடு முழுவதும் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.

ஏற்கெனவே தில்லி நோக்கி செல்லும்அனைத்து சாலைகளும் முற்றாக லட்சக்கணக்கான விவசாயிகளால் நிரப்பப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூர் - தில்லி சாலை பல லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ள மற்றொரு மிகப் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சாலையில் குவிந்துள்ளவிவசாயிகளிடையே, அகில இந்திய விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களும், அகிலஇந்திய விவசாயிகள் சங்க தலைவர்களுமான அசோக் தாவ்லே, ஹன்னன் முல்லா, பி.கிருஷ்ண பிரசாத், விஜூ கிருஷ்ணன், அம்ரா ராம் மற்றும்சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய செயலாளர் விக்ரம் சிங், ஒருங்கிணைப்புக் குழுவில்இடம்பெற்றுள்ள மேதாபட்கர், யோகேந்திர யாதவ், ராஜூ செட்டி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நேரடியாக உரையாற்றி, அவர்களுடன் அமர்ந்து போராட்ட எழுச்சிக்கு உரமேற்றி வருகிறார்கள்.

தமிழகம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் டிசம்பர் 14 திங்களன்று அம்பானி, அதானி நிறுவனங்கள் முன்பு எண்ணற்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கட்சிகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையேற்றனர்.விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம்முழுவதும் மாவட்ட ஆட்சியரகங்களில் காத்திருப்பு போராட்டமும் துவங்கியது.(செய்தி, படங்கள் 6) பல இடங்களில் தமிழக அரசின் காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டது.

கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் காவல்துறையினர் நடத்திய அராஜகங்களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ளஅறிக்கை வருமாறு:புதுதில்லியில் போராடி வரும்

தொடர்ச்சி 3ம் பக்கம்

;