india

img

பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே... மேற்குவங்க முடிவுகள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும்

கொல்கத்தா:
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு, 2021 ஏப்ரலில் தேர்தலில் நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான பிரச்சாரம் தற் போதே சூடுபிடித்து விட்டது.ஆளும் திரிணாமூல் காங்கிரசும், பாஜகவும் தங்களின் அதிகாரப் பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி, மேற்குவங்க தேர்தல்களம் தங்கள் இருகட்சிகளுக்கும் மட்டுமேயானது என்ற தோற்றத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் மக்களிடம் நேரடியாக சென்று தேர்தல் பணியை ஆற்றி வருகின்றன.

இதுதொடர்பாக மேற்குவங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதின் பிரசாதா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கட்சி மாறிகளை ஊக்குவிக்கும் கலையில் பாஜக-வும்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும்மாஸ்டர் பட்டம் பெற்றவை. இரண்டு கட்சிகளும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கட்சிகள். அவை இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.மேற்கு வங்கத்தில் “குஜராத் மாதிரியை” அமல்படுத்த பாஜகமுயற்சிக்கிறது. ஆனால், சாதி,மதம் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் கொள்கை வங்கத்தில் எடுபடாது. அவ்வாறு செய்வதில் பாஜக வெற்றிபெறாது.காங்கிரசைப் பொறுத்தவரை, மாநிலத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலைசந்திப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஏனெனில், இந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து அடிமட்ட அளவில் போராட்டத் திட்டங்களை வகுத்து கூட்டு இயக்கங்களை நடத்தி வருகின்றன. விரைவில் கூட்டணி குறித முடிவு அறிவிக்கப்படும்.அந்த வகையில், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும்.இவ்வாறு ஜிதின் பிரசாதா குறிப்பிட்டுள்ளார்.

;