சென்றார்கள் சென்றார்கள்
நாட்டின் பல முனைகளிலிருந்தும்
இரயில் வண்டிகளில்
வேன்களில் பேருந்துகளில்
கிடைத்தவற்றில் எல்லாம்
சென்றார்கள்
பயணம் பற்றி பயமில்லை
எந்த சாமிக்கும் வேண்டுதலில்லை
தரிசன வரிசை இல்லை
சேலைக்கும் மதுவுக்கும்
பணத்துக்கும் கையேந்தவில்லை
தொடர் வண்டிகள் நிரம்பின
நகரம் பரபரத்தது
எங்கும் கலவரமில்லை
நெரிசல் முற்றி சலசலப்பில்லை
தலைவனுக்கு துதி இல்லை
தானாக சென்றார்கள்
தனக்காக சென்றார்கள்
தன் தலைமுறைக்காய் சென்றார்கள்
தேசம் காணப் போகும்
புதுவிதி எழுத
சிந்தனை செய்த எளிய வர்க்கம்
விவசாயி தொழிலாளி
நடுத்தரம் பெண்கள் என
எந்த பாகுபாடும் இல்லை
குடும்பத்தோடு போனார்கள்
தோழர்களோடு போனார்கள்
நண்பர்களோடு போனார்கள்
நகரம் கிராமம் மாநிலம்
கடந்து போனார்கள்
போனது வெகுதூரம்
கண்டது கண்கொள்ளா காட்சி
எங்கும் பறந்த செங்கொடி
அன்பாய் வரவேற்ற பதாகைகள்
குடிசை முதல் கோபுரம் வரை
நிமிர்ந்து நின்ற
உதிரச் செங்கொடிகள்
இரத்தத்தால் காவியம் எழுதிய
காவிய நாயகர்களின்
வரலாற்றுச் சித்திரங்கள்
அழிக்க முடியாத
அக்கினிப் பிழம்புகளாய்
தியாகச் செங்கடல்
கண்டார் கண்டார்
கண்ணூரில் கண்டார்
அள்ளி முத்தமிட்ட செந்தேசமும்
பரந்து பறந்த பாட்டாளிகளின்
உதிரச் செங்கொடியும்
முஷ்டி உயர்த்திய கைகளும்
கண்டார் கண்டார்
கனவு தேசத்தில் கண்டார்
இன்குலாப் முழக்கங்கள்
எட்டுத்திக்கும் ஒலித்திட
சிபிஐஎம் 23ஆவது
அகில இந்திய மாநாட்டில்
தோழர்களை கண்டார்
கண்டவர் சொன்னது
செம்புரட்சி நிச்சயம்
அழியப் போவது பாசிசம்
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்
எழுவோம் ஆர்ப்பரித்து
கண்ணூர் மண்ணெடுத்து
தேசமெங்கும் மார்க்சிய
காவியம் படைத்து
பொதுவுடைமை பூமியை
இப்புவியில் மலரச் செய்வோம்