india

img

கேரளத்தில் குறையும் கொரோனா பரவல் வேகம்.... சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜார்ஜ் தகவல்....

திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீணா ஜார்ஜ் மேலும் கூறியிருப்பதாவது:

“கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் வேகம் இப்போது குறைந்து வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவா்கள் எண்ணிகையும், ஐசியு-வில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்போர் எண் ணிக்கையும் நாள்தோறும் குறைந்து வருகிறது.ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கே மீண்டும் பாதிப்பு ஏற்படுவது, இருமுறை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கும் கொரோனா ஏற்படுவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில்ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு ஏற்படும் விகிதம் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா உயிரிழப்பு தொடா்பான தகவல்களை அரசு முறையாக பதிவுசெய்து வருகிறது”.இவ்வாறு வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

;