india

img

ஆண்டுக்கு ரூ.500 கோடி சேமிக்கும் பசுமைத் திட்டம்..... கேஎஸ்ஆர்டிசியில் எல்என்ஜி பேருந்துகள் இயக்கம்....

திருவனந்தபுரம்:
கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகம் எல்என்ஜி பேருந்து சேவையை அறிமுகப்படுத்துகிறது. பசுமை எரிபொரு ளுக்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக பெட்ரோனெட் எல்என்ஜி லிமிடெட் நிறுவனத்துடன்  இணைந்து இத்திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் ரூ.500 கோடியை எரிபொருள் மூலம் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் தம்பனூரில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சர் அந்தோனி ராஜு கொடியசைத்து முதலாவது பேருந்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மூன்று மாத சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இந்த பேருந்துகளின் இயக்கம் தொடர் சேவையில் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். தற்போது இந்த சேவைதிருவனந்தபுரம்-எர்ணாகுளம் மற்றும்எர்ணாகுளம்-கோழிக்கோடு வழித்தடங் களில் உள்ளது. மூணாறு உள்ளிட்ட உயர் தூர பகுதிகளுக்கான சோதனை ஓட்டம் நடத்தப் படும். கேஎஸ்ஆர்டிசி 310 சிஎன்ஜி பேருந்துகளை புதிதாக வாங்கவும் 400 டீசல் பேருந்துகளை எல்என்ஜி ஆக மாற்றவும் அனுமதிக்கப்பட்டது. பசுமை எரிபொருளுக்கு மாறுவதன் மூலம், கேஎஸ்ஆர்டிசி ஆண்டுக்கு ரூ.500 கோடி சேமிக்க முடியும். தனியார் பேருந்துகளும் பரிசீலிக்கப்படும் என்றும், இது பஸ் உரிமையாளர்களுக்கு உதவ முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

;