india

img

கேரளாவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி : பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின், கேரள மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது. இதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் என்பது தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பிற்கு கேரள மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

;