india

img

கேரள முதல்வருக்கு எதிரான பாஜக நிர்வாகியின் அச்சுறுத்தல் வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறது... ஏ.விஜயராகவன்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் பாஜக மாநிலத் தலைவர்களின் பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக கேரள முதல்வருக்கு எதிராக பாஜகமாநில நிர்வாகி ஏ.என்.ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டியிருப்பது வன்முறைக்கான அழைப்பு என்றும் இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் (பொறுப்பு) ஏ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

அமைதியான சமூக சூழ்நிலையை கெடுக்கும் கலவரத்தை உருவாக்கும் முயற்சி இது. அரசியல் ரீதியான கருத்துக்கு அப்பால், முதல்வரின் குடும்பத்தினரை வரம்பு மீறி தாக்கியுள்ளது பாஜக. கள்ளப்பணம் - மோசடி குற்றச்சாட்டுகள் பாஜகவின் தலைமைக்கு எதிராக எழுந்துள்ள நிலையில், பாஜக தலைவரின் கொலைவெறிப் பேச்சுவெளியாகி இருக்கிறது. இது பாஜகவின் ஊழலை மூடிமறைத்து வன்முறையை கட்டவிழ்த்து விடும் முயற்சியாகும். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஒன்றிய அரசின் விசாரணை நிறுவனங்களின் உதவியுடன் கேரள அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சியை கேரள மக்கள்நிராகரித்தனர்.தொலைக்காட்சி விவாதங்களில் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக கூட, தேசத்துரோக குற்றம் சாட்டும் கும்பல், இங்கு சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கிறது. முதலமைச்சருக்கு ஆபத்து விளைவிப்பதாகவும், அவரது குழந்தைகளை போலி வழக்கில் சிக்க வைப்பதாகவும் ஏ.என்.ராதாகிருஷ்ணன்  அச்சுறுத்தியுள்ளார். கடத்தல் கள்ளப்பணம் சிக்கிய நிலையில் அதிகாரிகளை அச்சுறுத்துவதன் மூலம் சட்டத்தை தனது கைகளில்எடுக்க கே.சுரேந்திரன் முயற்சிக் கிறார்.

சட்டத்தின் ஆட்சியையும் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கேரளத்தில் இத்தகையஅச்சுறுத்தல்களும் சவால்களும் செல்லாது என்பதை பாஜக தலைவர்கள் நினைவில் கொள்வது நல்லது. இதுபோன்ற அச்சுறுத்தல் களையெல்லாம் தடுத்து தோற்கடித்ததே கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு. கடந்த காலங்களில், பலர் அவரை அச்சுறுத்திய போதெல்லாம், முதல்வர் வீட்டில்தான் தூங்கினார்.பாஜகவினரின் அச்சுறுத்தலுக்கு முன்பு மண்டியிடுவது கம்யூனிஸ்டுகளின் பாரம்பரியம் அல்ல. கம்யூனிச இயக்கமும் கேரளத்தில் அதன்தலைவர்களும் இதை விட பெரிய சவால்களை எதிர்கொண்டவர்கள். பாஜக தலைவர்களின் ஊழல் அம்பலப்படுத்தப் பட்டபோது, அவர்களின் குற்றவியல் தன்மை மேலும் மேலும் வெளிப்படுகிறது.

கள்ளப்பணம் வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கே. சுரேந்திரனுக்கு எதிரான சட்ட விசாரணையை முதலமைச்சர் தலையிட்டு முடிக்க வேண்டும் என்பது பாஜகவினரின் விருப்பம் என்றால், அதுநடக்காது. அதை செய்யாவிட்டால் முதல்வர், வீட்டில் தூங்க முடியாது, குழந்தைகள் சிறையில் இருக்க வேண்டும் என்கிற அச்சுறுத்தல் கேரளத்தில் செல்லாது. முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியதற்காக ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கள்ளப் பணம் கையும்களவுமாக பிடிபட்டதால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை மறைக்கவேகே.சுரேந்திரனும், ராதாகிருஷ்ண னும் அச்சுறுத்தலுடன் களத்திற்கு வந்துள்ளனர்.பண மோசடி புகார் தொடர்பாககாவல்துறையினர் விசாரணை யைத் தொடங்கியதையடுத்து கள்ளப்பண பரிமாற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. சட்டத்தின் ஆட்சி முறை  முதலமைச்சரின் தலைமையில் கேரளத்தில் அமல்படுத்தப்படுகிறது. ஆட்சியாளரை மிரட்டி அடிபணியச் செய்வது இங்குநடக்காது. இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக பொதுமக்களிட மிருந்து எதிர்ப்பு எழ வேண்டும்.இவ்வாறு ஏ.விஜயராகவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

;