states

img

கேரளத்தில் 21 அமைச்சர்கள்..... சிபிஎம் 12; கூட்டணி கட்சிகளுக்கு 9 அமைச்சர்கள்..... துறைகளை முதல்வர் முடிவு செய்வார்: ஏ.விஜயராகவன்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை யில் 21 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள். இதில் முதல்வர் உட்பட சிபிஎம் 12, கூட்டணி கட்சிகளில் 9 அமைச்சர்களும் இடம்பெறுவர். அமைச்சர்களின் துறைகளை முதல்வர் முடிவு செய்வார் என்று எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

திங்களன்று நடந்த எல்டிஎப் தலைவர்களின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.விஜயராகவன் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 

எல்டிஎப் அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் ஒரு அரசாங்கம் அமைக்க ப்படும். அமைச்சரவையில் சிபிஎம் 12, சிபிஐ 4, கேரள காங்கிரஸ் (எம்)-1. ஜனதா தளம் (எஸ்)- 1. என்சிபி-1.  இரண்டு அமைச்சர் பதவிகளை கூட்டணி கட்சிகள் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்ளும். ஜனநாயக கேரளா காங்கிரஸ், ஐஎன்எல் ஆகியவையும், கேரள காங்கிரஸ் பி மற்றும் காங்கிரஸ் எஸ் ஆகியவையும் இவ்வாறு பகிர்ந்து கொள்ள உள்ளன.

சபாநாயகர் பொறுப்பு சிபிஎம்-க்கும் துணை சபாநாயகர் சிபிஐ- க்கும் வழங்கப்பட்டுள்ளது. எல்டிஎப்பின் தலைமை கொறடாவாக கேரள காங்கிரஸ் எம்எல்ஏ தேர்வுசெய்யப்படுவார். பெரிய கூட்டத்தைத் தவிர்த்து, 20 ஆம் தேதி பதவியேற்பு நடைபெறும். 18 ஆம் தேதி மாலை சிபிஎம் சட்டமன்றக் கட்சி கூட்டம் கூடி புதிய சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வுசெய் யும். அதைத் தொடர்ந்து பதவி யேற்புக்கான அதிகாரப்பூர்வ விஷயம் குறித்து ஆளுநரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு ஏ.விஜயராகவன் கூறினார்.
ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் ஆண்டனி ராஜு மற்றும் ஐஎன்எல் இன் அகமது தேவர்கோவில் ஆகியோர் முதல் கட்டமாக இரண்டரை ஆண்டுகள் அமைச்சர்களாக இருப்பார்கள். இதற்கிடையில், கே. கிஷனை அமைச்சராக முன்நிறுத்த ஜனதா தளம் (எஸ்) முடிவு செய்துள்ளது. கேரள காங்கிரசில் ரோஷி அகஸ்டின் அமைச்சராகவும், டாக்டர் என். ஜெயராஜ் தலைமைக்கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எல்டிஎப் வெற்றியை கொண்டா டும் வகையில் கூட்டத்தில்  முதல்வர் பினராயி விஜயன் கேக்வெட்டி கூட்டணி கட்சி தலைவர் களுக்கு வழங்கினார்.

;