india

img

கேரளத்தில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.... திட்ட வடிவமைப்பை தயார் செய்தது பினராயி விஜயன் அரசு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்ட வடிவமைப்பை இடது ஜனநாயக முன் னணி அரசு தயார் செய்துள்ளது.

படித்த இளைஞர்களின் ‘வேலை’ என்ற கனவு இதன் மூலம்நனவாகும் என்று பினராயி விஜயன்தலைமையிலான அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கேரளத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தற்போது ‘கேரளா நாளட்ஜ் எக்கானமி மிஷன்’ (Kerala Knowledge Economy Mission) என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கே டிஸ்க்’ (Kerala Development andInnovation Strategic Council - K-DISC) என்கிற அரசு நிறுவனத்தால்தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மீது‘நாளட்ஜ் எக்கானமி மிஷன்’ தனது கருத்துக் கேட்பைத் தொடங்கியுள்ளது. இதில் வரும் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் இறுதித் திட்ட ஆவணத்தை செப்டம்பர் மூன்றாவது வாரம் நடக்கும்அமைச்சரவை பரிசீலித்து முடிவெடுக்கும்.

புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு முதற்கட்டமாக ரூ. 5600 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 சதவிகிததொகையை மாநில அரசு ஏற்கும்என்ற அடிப்படையில், அடுத்தஐந்து ஆண்டுகளில் ஆண்டொன் றுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய் யப்பட உள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நிர்வாக முகமையான கே- டிஸ்கிடம் இந்த தொகை தற்போது ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு ரூ. 2245 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டு உள் ளது. ரூ. 1140 கோடி அடிப்படை வசதிக்காகவும், ரூ.1140 கோடி உள்ளூர்தொழில் வளர்ச்சிக்கும் வழங்கப்பட உள்ளது.வீட்டிலிருந்து வேலை, வீட்டுக்குஅருகில் வேலைத் திட்டம் போன்றவற்றுக்காக ரூ. 2000 கோடி கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (Kerala Infrastructure Investment Fund Board - KIIFB) மூலம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ரூ.1500 கோடி ஆசிய வளர்ச்சிவங்கி, உலக வங்கி, பன்னாட்டு நிதிக்கழகம் ஆகியவற்றின் மூலம் திரட் டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.தொழில் சேவையைப் பயன் படுத்தும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 200கோடியை அவர்களின் பங்களிப்பாக பெறுவது உறுதி செய்யப்படும்.நாளட்ஜ் மிஷன் ஆன்லைன் தளம் வழியாக மூலதன சேவைக்கு இரண்டு சதவிகிதம் சேவைக் கட்டணம் (Facilitation Charges) ஈடாக்கப்படும். இது மிஷனின் நிலையானவருமானமாக மாறும். படித்தவர் களின் வேலைவாய்ப்புக்காக ‘என் வேலை என் பெருமை’ என்ற பெயரில் விரிவான பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். குடும்பஸ்ரீ மூலம் வேலை குறித்த ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலைதேடி 45 லட்சம் பேர்
கேரளத்தில் 45 லட்சம் படித்த வேலைவாய்ப்பற்றோர் உள்ளனர். இதில் ஐந்து லட்சம் பேர் பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் அல்லது வேலையை கைவிட்டோராக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களாகவும் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 16 லட்சமாக உள்ளது என்றும் அரசுதெரிவித்துள்ளது.

;