india

இஸ்லாமிய வேட்பாளருக்கு இடமில்லை : பாஜக அமைச்சர் பேச்சு!

கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவைத் தொகுதியில் இஸ்லாமிய வேட்பாளருக்கு இடமில்லை என கர்நாடக பாஜகவைச் சார்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறுகையில், கர்நாடக பெலகாவி தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த எந்தச் சமூகத்தினருக்கும் வாய்ப்பளிப்போம். ஆனால், இஸ்லாமியர்களுக்கு இடமில்லை. இந்து மதத்தைச் சேர்ந்த லிங்காயத்துகள், குருபாக்கள் அல்லது பிராமணர்கள் சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்களே தவிர இஸ்லாம் மதத்தினரை வேட்பாளராக முன்னிறுத்த மாட்டோம். பெலகாவி இந்துத்துவாவின் மையமாக உள்ளது. எனவே, இஸ்லாமியர்களுக்கு ஒருபோதும் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2018ல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரசுடன் இருக்கும் இஸ்லாமியர்கள் “கொலையாளிகள்” என்றும், பாஜகவுடன் இருப்பவர்கள் “நல்ல இஸ்லாமியர்கள்” என்றும் அவர் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

;