india

img

விரும்பியவரை மணப்பது ஒருவரின் அடிப்படை உரிமை... சாதி, மத பேதங்கள் குறுக்கே வர முடியாது... யாரும் இந்த திருமணங்களை தடுக்கவும் முடியாது.... கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

பெங்களூரு:
விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்வது, ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்த ஐடி பொறியாளர்கள் வாஜித் கான் மற்றும்ரம்யா. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒன்றாக பணி செய் யும் இடத்தில் காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்வதற்கும் முடிவு செய்தனர். ஆனால், இவர்களது திருமணத்துக்கு வாஜித் குடும்பத்தினர் சம்மதித்த நிலையில், ரம்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வாஜித் கான் தங்களது மகள் ரம்யாவை ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்துறையில் புகாரும் அளித்தனர். இதையடுத்து, ரம்யாவை மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார், வாஜித் கான் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.இதனிடையே, வாஜித் கான் கர்நாடகஉயர் நீதிமன்றத்தை நாடினார். ரம்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி,ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்ற கர்நாடக உயர்நீதிமன்றம் திங்களன்று அந்த மனுவை விசாரித்தது. ரம்யாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வாஜித் கான் மனு தொடர்பாக, நீதிபதிகள் சுஜாதாமற்றும் சச்சின் சங்கர் அமர்வு ரம்யாவிடம் கேள்விகளை எழுப்பியது. அப்போது, வாஜித் கானை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியரம்யா, தனது பெற்றோர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து, “ரம்யா ஒரு படித்த ஐடி பொறியாளர் ஆவார். அவர் தனது எதிர்கால வாழ்க்கை குறித்து முடிவு செய்வதில் தவறு இல்லை. எனவே அவரை மகளிர் காப்பக பராமரிப்பில் இருந்து விடுவிக்கிறோம்” என்று கூறிய நீதிபதிகள், “யாராக இருந்தாலும் ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் விரும்பும் நபரைசாதி, மத பேதங்களைக் கடந்து திருமணம் செய்து கொள்வதற்கான உரிமைஇந்திய அரசியலமைப்பில் கூறப்பட் டுள்ள ஒரு அடிப்படை உரிமை” என்றும், இதை யாராலும் தடுக்க முடியாது என்றுகர்நாடக உயர்நீதிமன்றம் கருதுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர்.‘கட்டாய மதமாற்றத் தடை’ என்ற அவசரச் சட்டத்தை உ.பி. பாஜக அரசு, கடந்தசனிக்கிழமையன்று (நவ.28) கொண்டு வந்தது. அதாவது, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால் அந்த திருமணம் செல்லாது. அனுமதி அவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமீனில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ்கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரைசிறைத் தண்டனை விதிக்கவும் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்யும். அதேபோலஎஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களை கட்டாயமாக மதம் மாற்றினால் ரூ. 25 ஆயிரம் அபராதத்துடன் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.இஸ்லாமிய ஆண் மற்றும் இந்துப் பெண் இடையிலான திருமணத்தை குறிவைத்தே இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்த உ.பி. அரசு, ஆளுநர் ஒப்புதல் அளித்த அன்றைய தினமே, தியோரனியா காவல்நிலையத்தில் ஒருவர் மீது வழக்கும் பதிவு செய்தது.

உ.பி.யைத் தொடர்ந்து, பாஜக ஆளும் கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களும் இதேபோல சட்டம் கொண்டுவரப் போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில்தான், சாதி, மதவேறுபாடுகளைக் கடந்து, விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

;