india

img

பதவி விலகுவதற்கு முன்புகூட முட்டைக் கொள்முதலில் முறைகேடு... எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு....

பெங்களூரு:
எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கு 3 நாட்களுக்கு முன்புகூட முட்டைக்கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர்நாடக சட்டப்பேரவைத் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, ‘பாஜக அரசின் 2 ஆண்டு ஊழல்கள்’ என்ற பெயரில் கையேடுஒன்றை வெளியிட்டு செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கர்நாடகத்தில் ஊழல் மற்றும்கறுப்புப் பணத்தால் அமைந்ததுதான் பாஜக அரசு. கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் மற்றும் தவறான ஆட்சி நிர்வாகம்தான் எடியூரப்பாவின் சாதனை. அவர் பதவி விலகுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கூடஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது.பாஜக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களே, தங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் புகார்களை கூறுகிறார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து அந்தந்தத் துறைஊழியர்களே எனக்கு கடிதங்களை எழுதுகின்றனர்.

இந்நிலையில்தான், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க-முதல்வரை மாற்றி அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திவிடலாம் என்று பாஜக மேலிடம் கருதுவது போல் தெரிகிறது. கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் ஏழை குழந்தைகளுக்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட முட்டை கொள்முதலில் ஊழல் செய்துள்ளனர். கொரோனா காலத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குசெய்வதிலும் ஊழல் செய்தவர் கள்தான் பாஜக-வினர். குறுகிய கால திட்ட பணிகளுக்கு டெண்டர் விடும் முன்பே 10 சதவிகித கமிஷன் பெறுகின்றனர். இவ்வாறு சித்தராமையா விமர்சித்துள்ளார்.

;