india

img

பாஜக வேட்பாளர்களை விரட்டி அடிக்கும் கிராம மக்கள்... உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் செய்ய முடியாமல் திணறும் பாஜக...

லக்னோ 
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாம் சூடுபிடித்துள்ளது. கிராமம், நகரம் என அங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் அதிரடி பிரச்சாரம் தான். இதனால் உத்தரபிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஆளும் பாஜகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது.

அந்த சம்பவம் யாதெனில் விவசாயிகளை கொன்ற நீங்கள் ஏன் எங்கள் ஊருக்குள் வருகிறீர்கள். வெளியே செல்லுங்கள் என கிராமப்பகுதியில் பாஜக செல்லும் இடங்களில் பொதுமக்கள் விரட்டி அடித்து வருகின்றனர். சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அஸ்மோலி தொகுதிக்கு உள்பட்ட ஷகர்பூர் கிராமத்துக்கு பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற பாஜக வேட்பாளர்  விரட்டியடிக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர் மணீந்தர் பால சிங் மீரட்டில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றபோது அவரது வாகனம் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. முன்வார்பூர் கிராமத்துக்குச் சென்ற விக்ரம் சமி என்ற பாஜக வேட்பாளரை கிராமத்துக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அவர் உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பாஜக வேட்பாளர் ஹரேந்திர சிங் ரிங்குவிற்கும் இதே நிலை தான்.

மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருவதால் பாஜக கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

;