india

img

ராமர் கோவில் அறக்கட்டளை நிதியில் ரூ.6 லட்சம் மோசடி.... நான்கு மாதத்திற்குப் பிறகு 4 பேர் கைது....

லக்னோ:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கிய போது,கூடவே ஆங்காங்கே நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்களும் துவங்கி விட்டன.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில், நரேந்திர ராணா என்பவர் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) பெயரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில் பெயரில் பல லட்சங்களை சுருட்டினார். மீரட்மாவட்ட கிராமங்களில் வீடு, வீடாகவும் வசூல் வேட்டையாடினார். இதற்கென ரசீதுகளையும் அச்சிட் டிருந்த அவரை, தாமதமாகவே போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் ராமர் கோவில் அறக் கட்டளை வங்கிக்கணக்கில் இருந்தே ரூ. 6 லட்சம், போலி காசோலை மூலம் கையாடல் செய்யப்பட்டது.ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை’ பெயரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ‘பாங்க் ஆப் பரோடாவங்கி’யில் கணக்கு தொடங்கப் பட்டிருந்தது.இந்த வங்கிக்கணக்கில் இருந்து, செப்டம்பர் 2-ஆம் தேதிரூ. 2.5 லட்சமும், 3-ஆம் தேதி ரூ. 3.5 லட்சமும் போலி காசோலை மூலம் மகாராஷ்டிராவிலுள்ள பஞ்சாப் நேசனல் வங்கிக் கிளைக்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 8-ஆம் தேதி 3-வது முறையாகவும் போலிகாசோலையைப் பயன் படுத்தி எஸ்பிஐ வங்கிக்கு, ரூ. 9 லட்சத்து 86 ஆயிரத்தை மாற்ற முயன்ற போதுதான் மோசடி தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளை பணத்தை மோசடி செய்ததாக, சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு,பிரஷாந்த் மஹாவால் ஷெட்டி, சங்கர் சீத்தாராம் கோபாலே, சஞ்சய் தேஜ்ராஜ், விமல் லல்லாஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்துக்கள். இதில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைப் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாக கூறப்படுகிறது.

;