india

img

பாஜக கட்சி, ஆட்சி இரண்டுமே நம்பகத்தன்மை இல்லாதவை..... கிசான் யூனியன் தலைவர் நரேஷ் தியாகத் விளாசல்...

லக்னோ:
பாஜக கட்சியும், அதன் தலைமையிலான மத்திய அரசும் நம்பத்தகுந்தவை அல்ல என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாயத் கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைஎதிர்த்து போராடும் தலைவர் களில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாயத்தும் முக்கியமான ஒருவர் ஆவார். இவரது தலைமையிலான சங்கத்தினர், தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மத்தியில் நரேஷ் திகாயத் பேசியுள்ளார். அதில், “வேளாண் சட்டங்களில் எதுவும் விவசாயிகளுக்கு நன்மை தருபவை அல்ல” என்றும், “எந்த நாட்டில் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் திருப்தியின்றி இருக்கிறார்களோ அந்த நாடு முன்னேற்றத்தை நோக்கி நகராது” என்றும் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் நலன்பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்” என்றும், ஆனால், பாஜக கட்சியும், அதன் தலைமையில் இயங்கும் மத்திய அரசும் நம்பகத் தன்மையை இழந்து விட்டதால், இனியும் அவற்றை நம்பமுடியாது” என்றும் கூறியுள் ளார்.மேலும், “நீதி கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும்” என்றும், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தாங்கள்முன்னெடுத்துள்ள இந்தப்போராட்டத்தை ஒவ்வொருவரும் தினசரி வாழ்க்கையின் அங்கமாகப் பார்க்க வேண்டும்!” என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;