india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக வியாழனன்று தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் விவசாயிகள் மீது போலீசார் தண்ணீரை பாய்ச்சி அடித்து,விரட்டினர்.  இதனை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் கட்சிகள் ,விவசாய சங்க தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் விவசாயிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளனர். 

                                                                 *************************

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 28 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

                                                                 *************************

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

                                                                 *************************

நிகழ் நிதியாண்டில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.1.36 லட்சம் கோடிக்கும் அதிகமான வரித்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

                                                                 *************************

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து (எல்விபி) வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 27 ஆம் தேதி முதல் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

                                                                 *************************

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் தொழில்நுட்பத் தொழில்முனைவர் இலோன் மஸ்க்.

;