india

img

"ஐந்திரன்" என்ற பெயர் இந்தியாவாக மாறியது! - சு.வெங்கடேசன் எம்.பி

ஐந்திரன்" என்ற பெயர் இந்தியாவாக மாறியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்வில் சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது:
"இந்தியா என்பது பிரிட்டீஸார் வைத்த பெயர் என்று சொல்கின்றனர். அது உண்மையல்ல,  ஐம்புலன்களையும் அடக்கியாண்ட சித்தார்த்தன் ஐந்திரன் என்று புகழப்படுகிறான். ஐந்திரன் என்ற பெயர் இந்திரனாக மாறுகிறது. அதுவே இந்திரர் நாடாகிறது. பின் இந்திய நாடாகிறது. இதனை 1909-ல் அயோத்திதாசர் எழுதியுள்ளார்.” இவ்வாறு அவர் கூறினார்.