india

இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் என மகளிர் ஆணையம் தகவல்!

இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாகத் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தகவல் தெரிவித்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்துத்துறையில் உலகத்திலேயே இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாகத் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்துறையில் உள்ள மொத்த விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்கள். உலக சராசரியைவிட இது 3 மடங்கு அதிகம் ஆகும்.

இந்தியாவுக்கு அடுத்ததாக அயர்லாந்தில் 9.9% பேரும், தென் ஆப்பிரிக்காவில் 9.8% பேரும், ஆஸ்திரேலியா 7.5% பேரும், கனடா 7% பேரும், ஜெர்மனி 6.9% பேரும், அமெரிக்கா 5.5% பேரும், இங்கிலாந்து 4.7% பேரும், நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் நாடுகளில் தலா 4.5%  பெண்கள் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர்.

;