india

img

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

புதுதில்லி,பிப்.11- கடந்த 2020 ஆம் ஆண்டில் நாடு  முழுவதும் சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்ற விசாரணை அமைப்புகளை நிறுவ வேண்டும் என்று உள்துறை அமைச்ச கம்  அறிவுறுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்கு கள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள் ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை  விட 11.8 சதவிகிதம் அதிகம். 2020-ல் பதிவான 50 ஆயிரத்து 35 வழக்குகளில், 30 ஆயிரத்து 142 வழக்குகள் மோச டியை உள்நோக்கமாககொண்டவை என்றும், இது மொத்த வழக்கு களில் 60 .2 சதவிகிதம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6.6  சதவிகிதம் வரை அதாவது 3 ஆயி ரத்து 293 வழக்குகள் பாலியல் தொடர்பு டையவை என்றும் கூறப்பட்டுள்ளது. புதுப் புது வழிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவ லையை ஏற்படுத்துவதாக உள்ள தாகவும்  பஞ்சாப், ராஜஸ்தான், கோவா,  அசாம் மாநிலங்களில் ஒரு சைபர் குற்ற விசாரணை அமைப்பு கூட இது வரை நிறுவப்படவில்லை என்றும், எனவே மாநில அரசுகள் சைபர் குற்றங் களை தடுக்க அனைத்து மாவட்டங்களி லும் சைபர் குற்ற விசாரணை அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

;