முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்(92) உடல்நலக்குறைவால் காலமானார்.
மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி டிச.26 இரவு 9.51 மணிக்கு உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.