மதுரா;
மதுராவில் இறைச்சிக்காகப் பசுக்களைக் கடத்தினார் என்று கூறி,‘ஷேர் கான்’ என்பவரை பசு குஒ டர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உ.பி. மாநிலம் மதுரா கோசிகலன் காவல்நிலையப் பகுதிக்குஉட்பட்ட துமோலா கிராமத்திலிருந்து, ஹரியானாவிற்கு பசுக்களைகடத்திச் செல்வதாக கோசாலை நடத்தும் சந்திரசேகர் பாபா என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் ஊரில் இருப்பவர்களை எல்லாம் திரட்டிச் சென்று, பசுக்களை கடத்தி வந்ததாக கூறப்படும் வாகனத்தை மறைத்து,அதில் இருந்த ஷேர்கான் உள்ளிட்டவர்களை வெளியே வருமாறு கூறியதாகவும், அப்போது ஷேர்கான்தன்னிடமிருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து பொதுமக்கள் மீது சுடவே,பதிலுக்கு பொதுமக்களில் இருந்தஅடையாளம் தெரியாத ஒருவர்ஷேர்கானை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, கொல்லப்பட்ட ஷேர்கான், அவரது மகன் ஷாரூக், ஷேர் கானுடன் இருந்த ரஹமான், ஷெஹசாத், காதீம் உள்ளிட்ட 6 பேர்மீதே பசுவதைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள் ளது.ஷேர் கானை கொலை செய்ததாக, அவரது மகன் ஷாரூக் அளித்தபுகாரின் பேரிலும், போனால் போகிறதென்று 3 பேர் மீது உ.பி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.