வாரணாசியில் உள்ளது ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், வாராணசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், ஒளரங்கசீப்பின் 16 ஆவது நூற்றாண்டில் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும், ஞானவாபி நிலத்தை மீண்டும் கோயில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர 1991இல் வாராணசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2023 டிசம்பர் மாதம் தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், மசூதி கட்டப்பட்ட நிலத்தில் முன்னர் இந்து கோயில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வரும் நிலையில், கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மக்கள் ஞானவாபியை மசூதி என்று அழைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில் சிவன் கோயில்' என்று பேசியுள்ளார்.
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.