லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் அடுத் தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், பிராமணர் மற்றும் உயர்சாதி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று பாஜகவும், சமாஜ் வாதியும் கருதுகின்றன.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியோ, தலித் மக்களின் வாக்குகளோடு பிராமணர்களின் வாக்குகள் இணையும் பட்சத்தில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கணக்கு போடுகின்றன. ஒட்டுமொத்தமாக பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்றுபிரதானக் கட்சிகளுமே பிராமணர் களின் வாக்குகளை குறிவைத்து வேலைபார்த்து வருகின்றன.“உ.பி. பாஜக அரசில் பிராமணர் கள் உட்பட உயர் சாதியினரும் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்கள்ஆளும் பாஜக மீது கோபமாக உள்ளனர்” என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி இரண்டு நாட்களுக்கு முன்புதெரிவித்திருந்தார். மேலும், சமாஜ்வாதி கட்சியிலுள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களைவைத்து, இதுதொடர்பாக மாநிலம்முழுவதும் தொடர் பொதுக்கூட்டங் களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “சமஸ்கிருத மொழியை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சிக்கிறது” என்று மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் மிஸ்ரா திடீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். பந்தேல்கண்டில் நடைபெற்ற விழாஒன்றில் இவ்வாறு அவர் பேசியுள் ளார்.“இந்து மதத்துக்கு ஆதரவானகட்சி எனத் தன்னைக் கூறிக்கொள் ளும் பாஜக, சமஸ்கிருத மொழியைஉ.பி.யில் ஒழித்து வருகிறது. நவீனப் பள்ளிகளை உருவாக்குகிறோம் என்றபெயரில் பாதிக்கும் மேற்பட்ட சமஸ்கிருதப் பள்ளிகளை உ.பி.யில் ஆளும்பாஜக மூடி விட்டது. இதன்மூலம் சமஸ்கிருத மொழி வலுவிழக்கத் துவங்கி விட்டது. இதன் பாதிப்பு நேரடியாக சனாதன தர்மத்திற்கு ஏற்பட்டுவருகிறது. இந்த வகையில் பிராமணர் களையும், வேறுபல வகைகளில் தலித்துக்களையும் பாஜக மாநிலம் முழுவதிலும் நசுக்குகிறது. பிராமண சமுதாயத்தினர் தேர்ந்தெடுத்து கொல்லப்படுகின்றனர். சித்தரகூடத் தில் பிராமணர்களை கொன்றது யார்எனத் தெரிந்தும் அவர்கள் கைதுசெய்யப்படவில்லை.கான்பூரில் குஷி துபே என்பவருக்கு கடந்த 2020 ஜூன் 29-இல் திருமணமானது. பிறகு ஒரு வழக்கில் கைதான அவருக்கு ஓராண்டு கடந்தும்ஜாமீன் வழங்கப்படாமல் அநீதி இழைக் கப்படுகிறது. இதைப் பார்த்து பிராமணர் சமுதாயமும் அமைதி காக்கிறது. பிராமணர்கள் விஷ்ணு மற்றும்பரசுராமரின் பரம்பரையை சேர்ந்தவர்கள். அவர்கள் நாட்டு மக்களை பற்றிசிந்திக்க வேண்டும்.
உ.பி.யில் 13 சதவிகித பிராமணர் களும், 23 சதவிகிதம் தலித்துக்களும் உள்ளனர். இந்த இருவரும் ஒன்றிணைந்தால் 2022-இல் பகுஜன் சமாஜ்கட்சி ஆட்சியில் அமரும். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி செய்த போதுதான், பிராமணர்கள் மாநில அமைச்சர்உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தது போல, பாஜக ஆட்சியிலும் ரவுடியிசமும், மோசமான சட்டம் ஒழுங்கும் நீடிக்கிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே முடிவு கட்ட முடியும்” என்று சதீஷ் சந்திரா கூறியுள்ளார்