தில்லி, அக். 4 - திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தை விசாரி க்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவில் 2 சி.பி.ஐ. அதிகாரிகள், 2 ஆந்திர காவல்துறை அதி காரிகள், உணவுப்பாது காப்புத்துறை மூத்த அதி காரி ஒருவர் இடம்பெற வேண்டும் என உத்தர விட்டிருக்கும் உச்ச நீதி மன்றம் இந்த விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் என்றும் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில், நீதி மன்றத்தை அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்து வதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என தெரி வித்துள்ளது.