india

img

பத்மஸ்ரீ விருதை திருப்பி தர போவதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!

பத்மஸ்ரீ விருதை திருப்பி தர போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி-யும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங், புதிய WFI தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, பத்மஸ்ரீ விருதை திருப்பி தர போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.