india

img

மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

புதுதில்லி, ஜூன் 26- அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜூன் 26 புதனன்று தில்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவை பலப் படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோ சிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு நடைபெற வுள்ளது. இம்மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி யேற்றபின் முதல்முறையாக  டிரம்ப்பை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், மைக் பாம்பியோவின் இந்திய வருகை முக்கியத்து வம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி - மைக் பாம்பியோ சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்ச கத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “இருதரப்பு உறவை வலுப்படுத்த இணைந்து பணி புரிந்து வருகிறோம். இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோ சந்தித்தார். ஒசாகாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் போது ஜனாதிபதி டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார்” என்று தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், மைக் பாம்பியோவுடனான சந்திப்பின் போது ரஷ்யாவுடனான ஏவுகணை ஒப்பந்தங்கள், பயங்கரவாதம், ஹெச்-1பி விசா, வர்த்தகம், வரிகள், ஈரானிடமிருந்து எண்ணெய் கொள் முதல் செய்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது எனத் தெரிகிறது.