india

img

ஆளுநருக்கு அதிக அதிகாரம் - யுஜிசி விதிகள் திருத்தம்!

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் புதிய விதிகளின் வரைவை யுஜிசி வெளியிட்டுள்ளது.
யுஜிசி-யின் 2025 வரைவு அறிக்கையை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இந்த புதிய விதிகளின் வரைவின் படி,
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்யும் தேடுதல் குழுவை, பல்கலைக்கழக வேந்தராக பதவி வகிக்கும் ஆளுநரே முடிவு செய்யலாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
முன்னதாக, பேராசிரியர், ஆராய்ச்சி அல்லது கல்வி நிர்வாக பணிகளில் 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்களே துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என இருந்த விதிகளை தற்போது தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள தனிநபர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், தங்கள் உயிர்கல்வியில் தேர்வு செய்த பாடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களாக கருதப்படுவர். உதாரணமாக, வேதியியலில் பிஎச்டி, கணிதத்தில் இளங்கலை மற்றும் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், வேதியியலில் நிபுணத்துவம் கொண்டவர்களாக கருதப்படும். அவர் வேதியியலில் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க தகுதி பெறுகின்றனர்.
அதேபோல், தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்கள், தாங்கள் பட்டம் பெற்ற பாடத்திலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் தேர்வு எழுதியிருந்து அதில் தேர்ச்சி பெற்றால், அந்த பாடத்தையே கற்பிக்க தகுதி பெறுகின்றனர்.
ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்படும் விவுரையாளர்கள் (Lecturers) அதிகபடியாக 6 மாத காலத்திற்கு பணியமர்த்தப்படலாம்.
இவ்வாறு முக்கிய மாற்றங்களை வரைவு அறிக்கையில் யுஜிசி செய்துள்ளது.