india

img

பாஜக ஆளும் மாநிலங்களின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

மோடி பிரதமர் ஆன பின்பு பாஜக ஆளும் மாநிலங்க ளில் குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடு களை இடிக்கும் நடைமுறை தொடர் ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறைக்கு எதி ராக உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டு இருந்த நிலை யில், செவ்வாயன்று நீதிபதிகள் ஒய். ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகி யோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு  வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், “புல்டோசர் இடிப்பு நாள்தோறும் தொடர் கிறது. ஒரு மத ஊர்வலம் நடந்தால் அங்கு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகிறது. உடனே மறுநாள் கட்டடங்கள் இடிக்கப் படுகின்றன” என்ற வாதத்தை முன்வைத் தார். ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,“ஆக்கிரமிப்பு கட்டடங்கள்  மட்டுமே நோட்டீஸ் அனுப்பி இடிக்கப்படு கின்றன” என பதிலளித்தார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,“கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு உடனே  புல்டோ சர் மூலம் இடிப்பதை ஏற்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகளை, கட்டடங்களை மட்டும் இடிப்பது என்பது அரசியல் அமைப்பின் நெறிமுறைகளு க்கு எதிரானது. குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டு தலங்களை மட்டும் இடிப்பது ஏன் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பி,”அக்.1 வரை வீடுகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை புல்டோசர் மூலம் இடிக்க தடை விதிக்கப் படுகிறது” என உத்தரவிட்டனர்.