தமிழக எம்.பி-க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமும், ஜனநாயகமும் இல்லாதவர்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள் என்கிறார் தர்மேந்திர பிரதான். தர்மேந்திர பிரதான் அவர்களே, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உங்களின் அதிகாரத்தையும், ஆணவத்தையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவோம்.
ஒன்றிய கல்வி அமைச்சருக்குத் தேவைப்படும் கல்வியைக் கற்றுத்தரும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.