நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு இன்று (மார்ச் 10) தொடங்கியது.
2025ஆம் ஆண்டின் நாடா ளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடை பெற்ற நிலையில், நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கியது.
அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து, தொகுதி மறுவரையறை பாதிப்பு குறித்து விவாதிக்க மக்களவையில் கனிமொழி எம்.பி-யும், மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி-யும் நோட்டீஸ் வழங்க்கியுள்ளனர்.