india

img

மக்களவையில் பேசியதை திரும்பப் பெற்ற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

புதுதில்லி,மார்ச்.10- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு எம்.பிக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. 
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களவையில் பேசுகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரீகமானவர்கள் எனப் பேசிய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவைத்தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். 
அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க திமுக எம்.பி.க்கள் முடிவு என கனிமொழி எம்.பி. அறிவித்தார் இதனையடுத்து தான் பேசியதை தர்மேந்திர பிரதான் திரும்பப் பெறுவதாக மக்களவையில் தெரிவித்தார்.