india

img

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைவராக 3 ஆண்டுகளுக்கு எஸ்.சோம்நாத்தை ஒன்றிய அரசு புதன்கிழமை(ஜன.12) நியமித்தது. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் மாணவரான சோம்நாத் 1985 இல் இஸ்ரோவில் சேர்ந்தார். மேலும் துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்(பிஎஸ்எல்வி) மற்றும் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள்(ஜிஎஸ்எல்ஜி) திட்டங்களில் விரிவாக பணியாற்றியுள்ளார். இவர் 2018 முதல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின்(விஎஸ்எஸ்சி) இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.