india

img

நியூஸ் கிளிக் ஆசிரியரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோடி அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் ‘நியூஸ் கிளிக்’ இணையதள செய்தி நிறுவனத்தின் தில்லி அலுவலகத்திற்கு தில்லி போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீல் வைத்தனர். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகக் கூறி, நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் தலைமை ஹெச்.ஆர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை தில்லி போலீசார்  உபா சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில், நாடு முழுவதும் இதற்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வழக்கில், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த மே 6-ஆம் சக்கரவர்த்தி மட்டும் விடுதலை செய்யப்பட்டார். 
இதனிடையே தமது கைது நடவடிக்கைக்கு எதிராக பிர்பீர் புர்காயஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில், நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.