india

img

“புஷ்பா 2” திரைப்படம் பெண் பலி ; சிறுவன் கவலைக்கிடம்

சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உரு வான “புஷ்பா 2” திரைப்படம் வியாழக்கிழமை அதி காலை உலகம் முழு வதும் ரிலீசானது. “புஷ்பா” முதல் பாகம் ஹிட் அடித்ததால் இரண் டாவது பாகத்தை காண நாட்டின் பல இடங்களில் உள்ள தியேட்டர்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தில்சுக் நகரை சேர்ந்த பாஸ்கர், தனது மனைவி ரேவதி (39), மகன் ஸ்ரீதேஜ் (9), மகள் சன்விகா (7) ஆகியோருடன் வியாழக்கிழமை அதி காலை ஆர்.டி.சி.எக்ஸ் சாலையில் உள்ள  தியேட்டருக்கு “புஷ்பா 2” திரைப்படம் பார்க்க சென்றனர். அப்போது எதிர் பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிச லில் பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கினர். பாஸ்கர், சன்விகா ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் இருந்து வெளியேறி னர். ஆனால் ரேவதி, ஸ்ரீதேஜ் ஆகிய இருவரும் நெரிசலில் சிக்கி மயக்க மடைந்தனர். 

இதையடுத்து போலீசார் அவர் களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்து வர்கள், ரேவதி ஏற்கனவே இறந்துவிட்ட தாகவும் ஸ்ரீதேஜ் சுயநினைவில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.