india

img

ஆட்டோ டெபிட் முறையில் நீடிக்கும் குற்றச்சாட்டுகள்  

ஆட்டோ டெபிட் முறையில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபோதிலும் சில வங்கிகள் அதை முறையாக செயல்படுத்தாமல் உள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

புதுடில்லி – சேவை மற்றும் பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அவற்றுக்கான கட்டணத்தை ஆட்டோ டெபிட் முறையில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து வந்தன. இம்முறையினால் வாடிக்கையாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தை அடுத்து ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை அறிவித்தது.  

இதில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆட்டோ டெபிட் செய்யப்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடம் குறுஞ்செய்தி மற்றும் ஒருமுறை கடவு எண் வாயிலாக அனுமதி பெற்றே பணத்தை எடுக்க இயலும் என அறிவிக்கப்பட்டது.  

இந்த நடைமுறை அக்டோபர் முதல் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் வணிகங்கள் மற்றும் வங்கிகள் தரப்பில் நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.